India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித் குமார் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 5 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் சத்யநாதன் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் அஜித்குமார் என்கின்ற இளைஞர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் சந்திரமோகன் (29) , சதீஷ் (26), பாலாஜி(29), ஸ்ரீராம் (27). சந்திரமௌலி ஆகிய ஐந்து நபரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவீனம் கணக்கீட்டாளர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி , தேர்தல் செலவீன பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இஸ் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி இன்று (மார்ச் 21) 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் (பாதிக்கு பாதி பெண்கள்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாள் களம் காண்கிறார்.நாளை மறுநாள் (மார்ச்-23) அன்று சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் மாரிட்டன் பள்ளியின் சீனியர் கே.ஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க,செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுகந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற தேர்த் திருவிழா நாளை மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு செல்வோர் காலை 7.10 மணிக்கு உள்ள ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தர காலை 9.30 மணிக்கு திருவாரூரில் ரயில் இருப்பதாக அறிவித்தனர்.

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.