Mayiladuthurai

News January 5, 2026

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

<>கூகுளில் mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

மயிலாடுதுறை: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்

image

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் ஊராட்சி பெருமுலை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் எம்பி சுதா பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

News January 5, 2026

மயிலாடுதுறை: 10th போதும்.. தமிழக அரசு வேலை!

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் முழு நேர கிளை நூலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News January 5, 2026

மயிலாடுதுறை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

மயிலாடுதுறை: மேம்பாலம் நாளை திறப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம் காவேரி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகி மாணவ மணி சாரங்கபாணி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் தற்பொழுது மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

News January 5, 2026

மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

image

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்

News January 5, 2026

மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

image

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்

News January 5, 2026

மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

image

செங்கோட்டை -மயிலாடுதுறை விரைவு ரயில் ஜனவரி மாதம் 1, 7, 14, 15, 16, 21, 26, 28 தேதிகளில் மட்டும் திருமங்கலம் மதுரை திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை வரும், மற்ற தேதிகளில் மாற்று வழிதடமான அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை வந்தடையும். மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் எவ்வித மாற்றமும் இன்று திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!