India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் காணொளி காட்சி வாயிலாக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் , பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
ரயில் நிலையத்தில் உள்ள
இருசக்ககர வாகன காப்பகம் ஜூன்-1 முதல் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தி வைத்துள்ளவர்கள் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தங்கள் வண்டியை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதில் நேற்று மாவட்டத்தில் கிராம பகுதிகளில் மழை நீர்,கழிவு நீர் வடிகால்கள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மே 31ஆம் தேதி முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரை வடிகால்கள் தூர் வாருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் , தூய்மைப்படுத்துதல் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற ஜூன் மாதம் 07-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள 28வது திவ்ய தேசமான திரிவிக்கிரம பெருமாள் கோயில். பாடலிகவனம் என்றழைக்கப்படும் இங்குள்ள பெருமாள், சீராம விண்ணகரம் தாடாளன், மற்றும் திருவிக்கிரம பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயிலில் ஒருநாள் மட்டுமே உற்சவர் தரிசனம் செய்வார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும், அர்த்த மண்டபம் மகாமண்டபம் என 2 மண்டபங்களும் உள்ளன.

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ளது 28 ஆவது திவ்ய தேசமான திரிவிக்கிரம பெருமாள் கோயில். பாடலிகவனம் என்றழைக்கப்படும் இங்குள்ள பெருமாள், சீராம விண்ணகரம் தாடாளன், மற்றும் திருவிக்கிரம பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயிலில் ஒருநாள் மட்டுமே உற்சவர் தரிசனம் செய்வார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும், அர்த்த மண்டபம் மகாமண்டபம் என 2 மண்டபங்களும் உள்ளன.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து நம்பிக்கை ஏற்படுத்தி ஏமாற்றி மோசடி செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற்றுவது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது என பொதுமக்களை மோசடியில் ஈடுபடும் நபர்களிடமிருந்து விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்.
Sorry, no posts matched your criteria.