Mayiladuthurai

News January 22, 2026

மயிலாடுதுறை: 1000 ஆண்டு பழமையான கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில், தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார்.தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக இக்கோயில் ஐதீகம்.

News January 22, 2026

மயிலாடுதுறை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<> கிளிக்<<>> செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

News January 22, 2026

மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

மயிலாடுதுறை: மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்

image

சீர்காழியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூகம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குத்து விளக்கேற்றி நிழ்கவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 22, 2026

மயிலாடுதுறை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற<<>> இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டமானது 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாம்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

மயிலாடுதுறை: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே பலி – சோகம்

image

கொள்ளிடம் அருகே புத்தூர் மேலதெருவை சேர்ந்தவர் பாலு(58). விவசாய கூலி தொழிலாளியான இவர், நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு புறவழிச் சாலையை கடக்க முற்பட்டார் அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 22, 2026

மயிலாடுதுறை: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே பலி – சோகம்

image

கொள்ளிடம் அருகே புத்தூர் மேலதெருவை சேர்ந்தவர் பாலு(58). விவசாய கூலி தொழிலாளியான இவர், நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு புறவழிச் சாலையை கடக்க முற்பட்டார் அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 22, 2026

மயிலாடுதுறை: இன்று மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையத்தில், இன்று (ஜன.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் கடலங்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில், காலை 9 மணி மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

error: Content is protected !!