Mayiladuthurai

News January 20, 2026

மயிலாடுதுறை: 15 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பெரம்பூர் காவல் சரகத்தில் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மங்கநல்லூர் காடுவெட்டியை சேர்ந்த இளங்கோவன்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15கி குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

மயிலாடுதுறையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் துணை ஆட்சியர் கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள் ஆகியோர் உடன் பங்கேற்றனர்

News January 20, 2026

மயிலாடுதுறை: கார் மோதி பரிதாப பலி!

image

தலைச்சங்காடுவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (43). இவர் மனவெளி தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் தலைச்சங்காடு பைபாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சீர்காழி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரம் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் கல்யாண சுந்தரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

News January 20, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 19, 2026

மயிலாடுதுறை: கஷ்டங்கள் நீங்க இங்கு போங்க!

image

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.

News January 19, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

மயிலாடுதுறை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவரான வி.ஆர்.எஸ்.பானுசேகர் காங்கிரஸ் கமிட்டியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைமையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தியாயடுத்து புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!