India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் 33 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லமலை பேராசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும் 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மகாராஜபுரம் பகுதியில் வீடுகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் இன்று செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயரை சுவரில் வரைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி, ரங்கோலி கோலம் இடுதல், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளின் சார்பில் சண்முக சுந்தர் ராஜா பள்ளியின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான ஆவணத்தை தருமபுரம் ஆதீனத்திடம் இன்று வழங்கினார்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலை சேர்ந்த கவின்,ஜஸ்வந்த்,காளிதாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ராதாநல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவின்,ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸை பொதுமக்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் லீலாவதி பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு தற்பொழுது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கூட்டணி கட்சிகளான திமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.