Mayiladuthurai

News May 23, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் மே 21ஆம் தேதி வரை 1675 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1688 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடமிருந்து 44977 லிட்டர் பாண்டி சாராயம் , 3348 பாண்டி சாராய பாட்டில்கள் , 3498 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News May 22, 2024

மயிலாடுதுறையில் பணிகள் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்கு எண்ணும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி மற்றும் பல்வேறு அதிகாரிகள் இந்த பணிகளில் பங்கேற்றனர்.

News May 22, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணி அளவில் எண்ணப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அலுவலர்கள் , ராணுவம், பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் அளித்த வாக்குச் சீட்டுகள் மற்றும் முதியோர்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாக்குகள் 7 மேசைகளில் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

மயிலாடுதுறை : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

மயிலாடுதுறை: போலீஸ் கடும் எச்சரிக்கை

image

சீர்காழியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்க அனுமதித்தால் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.

News May 22, 2024

மயிலாடுதுறை: போலீஸ் கடும் எச்சரிக்கை

image

சீர்காழியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்க அனுமதித்தால் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.

News May 22, 2024

மயிலாடுதுறையில் தீக்குளித்த காதலி பரிதாபமாக உயிரிழப்பு

image

மயிலாடுதுறையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கல்லூரி காதல் ஜோடி இடையே ஏற்பட்ட காதல் பிரச்சனையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் தீக்காயமடைந்த காதலன் ஆகாஷ் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலி சிந்துஜா சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் சிந்துஜா மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது‌.

News May 22, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை புகார் எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இணைய வழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1930 அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றப்பிரிவு அலைபேசி எண் 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News May 21, 2024

மயிலாடுதுறை: குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

image

மயிலாடுதுறை பகுதிகளில் மதுவிலக்கு குற்றத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்ட பாபு என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News May 21, 2024

பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை போலியாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவது தொடர்பாக மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காவலர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிட்டப்பா அங்காடி பகுதியில் வழங்கி தகுந்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு கூறினர்.

error: Content is protected !!