Mayiladuthurai

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் , காளி, கொற்கை, முருகமங்கலம், நமச்சிவாயபுரம் , பாண்டூர், பொன்னூர், தாழஞ்சேரி, திருமங்கலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி காளி கிராமத்தில் யு.மு.சு மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை ஜூலை 26ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

மைசூர் ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள்

image

மைசூர் – கடலூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அதனை ஏற்று மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

News July 25, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 25, 2024

கல்லூரி வகுப்பறை திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்றார்

image

மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 3.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 24 வகுப்பறைகளை தமிழக முதலமைச்சர் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News July 25, 2024

ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வருகின்ற ஜூன் 28ஆம் தேதி ரயில் நிலையம் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணி அளவில் ரயில்வே நிலையம் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.

News July 24, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் “மக்களுடன் முதல்வர் முகாம்” ஆத்தூர், பூதங்குடி , கடலங்குடி, கேசிங்கன், கிழாய், முடிகண்டநல்லூர், திருச்சிற்றம்பலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி அங்குள்ள நிலவர் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று(ஜூலை 24) தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பில் சிறந்து விளங்கியமைக்காக மத்திய அரசின் விருது பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று(ஜூலை 24) சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 24, 2024

காவலர்களை மாற்றி SP உத்தரவு

image

மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர் நிர்மலை கைது செய்ய உத்தரவிட்டனர். மேலும் மணல்மேடு காவல் உதவி ஆய்வாளர் அகோரம் & காவலர் சந்தோஷ் பிரபு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து SP மீனா நேற்று(ஜூலை 23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 24, 2024

துப்பாக்கியால் சுட்டு விமானப்படை வீரர் தற்கொலை

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை 24) காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த காளிதாஸ்(55) என்பவர் பயிற்சி மையத்தின் 8 ஆவது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 3 தோட்டக்கள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார்.

error: Content is protected !!