Mayiladuthurai

News July 29, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அப்போது உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News July 29, 2024

மயிலாடுதுறை காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 1 துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் , 4 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்.

News July 28, 2024

தமிழக முதலமைச்சருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் உபரிநீரை நீர்நிலைகளில் நிரப்ப எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினார்.

News July 28, 2024

பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மாலையில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News July 28, 2024

தனிப்படை காவலர்களுக்கு வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடித்து சிறப்பாக பணிபுரிந்த, தனிப்படை காவலர்களை நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து காவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

News July 28, 2024

அப்துல் கலாமின் நினைவு தினம் 

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மறைந்த அப்துல் கலாமின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது ‌. இதனை முன்னிட்டு சர்வதேச காலம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.

News July 28, 2024

மயிலாடுதுறை மார்க்கமாக சிறப்பு ரயில்

image

திருச்சியிலிருந்து இன்று இரவு 11 மணிக்கு துவங்கி மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு நாளை காலை 6.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு மெமு ரயில் ஒரு நாள் மட்டும் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் முன்பதிவு இல்லாத வகையில் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ள இந்த ரயில் இரவு 12.05 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 26, 2024

மயிலாடுதுறை மார்க்கமாக சிறப்பு ரயில்

image

தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக திருச்சி வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இன்று இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறைக்கு நாளை ஜூன் 27 அதிகாலை 3.55 மணிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

News July 26, 2024

மயிலாடுதுறையில் நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது. தலைமை தபால் நிலையம் எதிரில் காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

News July 26, 2024

மயிலாடுதுறையில் அதிரடி காட்டிய கு.செல்வபெருந்தகை

image

மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு எம்.எல்.ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையல் கூடம் மிகவும் சுகாதாரமற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த கு.செல்வபெருந்தகை சமையலர் செல்லப்பா, காப்பாளர் மோகன், ஆதி., நல அலுவலர் சுரேஷ், இளநிலை பொறியாளர் லட்சுமிகாந்தன் ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்தார்

error: Content is protected !!