Mayiladuthurai

News August 18, 2024

மயிலாடுதுறையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு 

image

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 56 பெண் குழந்தைகள் மற்றும் 50 பெண்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மற்றும் உளவியல் பயிற்சி இன்று நடைபெற்றது. துணை காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

News August 18, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
share now

News August 18, 2024

மயிலாடுதுறை விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

மயிலாடுதுறையில் நாளை மினி மாரத்தான்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நாளை காலை 6.30 மணியளவில் சாய் பயிற்சி மையத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைகிறது. இப்போட்டியில் 11 வயது முதல் 21 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் எனவும் இன்று மாலைக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 17, 2024

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

News August 17, 2024

செக்கந்தராபாத் – மயிலாடுதுறை இடையே சிறப்பு இரயில்

image

செகந்திராபாத்தில்
(வண்டி எண்07125 & 07126) இருந்து மயிலாடுதுறை வழியா வேளாங்கண்ணி வரை சிறப்பு இரயிலானது ஆகஸ்ட் 27, 29 மற்றும் செப் 4, 7 ஆகிய தினங்களில் காலை 8:25 புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:58 மணிக்கு மயிலாடுதுறை வருகிறது. பிறகு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு
வேளாங்கண்ணி காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது. பொது மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

News August 17, 2024

விசிக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளினை முன்னிட்டு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

News August 17, 2024

மயிலாடுதுறையில் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந் தேதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News August 16, 2024

மயிலாடுதுறையில் பரவும் பொய் தகவல்களை நம்ப வேண்டாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 19, 20 ஆகிய மூன்று தினங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை கொடுக்கவும், உடனடியாக அனைவருக்கும் பணம் கிடைக்கும் என்றும் போலியான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய பொய் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!