India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளின் பங்களிப்புடன் சுமார் 14,000 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வணிக நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகளில் சிசிடிவி பொறுத்த பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக மாநகர காவல் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் 175 கடைகள் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகர் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு கொலை, கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை காவல்துறை சார்பாக 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களுக்குக் கருத்தடை ஊசி போடுவதை அதிகரிக்கவும் செல்லூர், வெள்ளைக்கல் பகுதிகளில் உள்ள விலங்குகள் கருத்தடை மையங்களை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாய்பிடி வாகனங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவும் விரைவில் அளிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான பயணம், முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழை வழங்கி வேலைவாய்ப்பு பெறலாம். இப்பயிற்சியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா இன்று (ஜன.01) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய். இவர் தேனி மாவட்டம் கூடலூரில் வசித்து வருகிறார். இவருக்கும் இவர் மனைவி இலக்கியாவுக்கும் குடும்பத் தகராறு இருந்த நிலையில், பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் இலக்கியா. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர் இன்று (ஜன.01) அனுமதிக்கப்பட்டார்.
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையில் இருந்து மாலை 4:10 மணிக்கு பதிலாக மாலை 3:.45 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை — சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் மதுரையில் இருந்து இரவு 8:50 மணிக்கு பதிலாக இரவு 8:45 மணிக்கும் புறப்படும். மேலும் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளது.
சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016இல் தாக்கலான கொலை வழக்கில் குற்றவாளிகளான மணிமாறன் (31), மணிகண்டன்(35), புல்லட் மணி(36), சரவணன்(45), அஜித் குமார்(33) ஆகியோர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட மகிளா நீதிமன்றம் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
தமிழக முழுவதும் 5க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ள நிலையில் 17 சார் பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணியாற்றிய மாலினி ஜெயஸ்ரீ என்ற அலுவலரை மதுரை தெற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தின் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.