Madurai

News January 20, 2025

மதுரையில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது – ஆணையர்

image

மாநகரக் காவல் ஆணையர் நேற்று செய்தியாளர்களிடம், “மதுரை நகரில் 63 இருசக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது போன்ற தொடர் பணிகளால் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது ” என்று கூறினார்.

News January 20, 2025

கச்சத்தீவு தான் எல்லாத்துக்கும் காரணம்; ஆதீனம் பேட்டி

image

இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள் அது ராஜீவ் காந்தி அரசுதான், அனால் மோடி அரசு அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.இலங்கையில் தனிநாடு வேண்டும். அதற்காக தான் மோடியை சந்தித்து வருகிறேன். இலங்கை மீனவர்களை கைது செய்த காரணம் கச்சத்தீவு தான். எல்லாத்துக்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான் என மதுரை ஆதினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

News January 19, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

பலூன் திருவிழாவில் காட்சி பொருளாக மாறிய பலூன்

image

அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்ற சர்வதேச பலூன் திருவிழா நேற்று துவங்கியது.
நேற்று மலையில் அதிவேகத்தில் காற்று வீசியதன் காரணமாக ஒரேஒரு பலூனை மட்டும் பறக்க விட முயற்சித்தனர். ஆனால்,பலூன் அங்கும்,இங்குமாக சாய்ந்தது. இதையடுத்து அந்த ராட்சத பலூன் காட்சி பொருளாக மட்டுமே இடம்பெற்றது

News January 19, 2025

ஆடுகளுடன் மலையேற முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

image

கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் முஸ்லிம் ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இவ்விவகாரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நேற்று சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு பலிகொடுத்து விருந்து நடத்த திரண்டனர். அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

News January 18, 2025

சென்னை எக்மோர் – மதுரை – சென்னை எக்மோர் மெமோ ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

image

சென்னை எக்மோர் – மதுரை மெமோ ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்களை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது ரயில் எண்கள்-06061/06062 சென்னை எழும்பூர்-மதுரை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வழித்தடங்களில் கூடுதல் நிறுத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி அம்பாத்துரை சோழவந்தான், கூடல்நகர் 18.01.2025, 19.01.2025 ஆகிய தேதிகளில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெரிவித்துள்ளனர்.

News January 18, 2025

மதுரை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாநகராட்சி சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எதிர்வரும் 21.01.2025 நடைபெற உள்ளது. மேயர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்பதால் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து நிவர்த்தி செய்ய அறிவுறுத்தல். *ஷேர்

News January 18, 2025

நடந்து சென்றவர் மீது வாகனங்கள் மோதியதில் துண்டு துண்டான உடல்

image

மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி அருகே உரப்பு ஓட்டல் எதிர்புறம் இன்று அதிகாலை நடந்து சென்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பலியான அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஏறி இறங்கியது. இதில் உடல் துண்டு துண்டாக போனது. இறந்தவர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2025

அஸ்ட்ரோ நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

image

மதுரை மத்திய சிறையில் தினசரி காலை மாலை போதை பொருள் தடுப்பு தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டு வந்த அஸ்ட்ரோ நாய் உயிரிழந்தது.இதனையடுத்து உயிரிழந்த அஸ்ட்ரோ நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மதுரை மத்திய சிறையில் உள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டது. டிஐஜி முருகேசன் எஸ்பிசதீஷ்குமார் , ஜெயிலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

News January 18, 2025

சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3-ம் இடம்

image

மதுரை : சொத்து வரி வசூலில் தமிழக அளவில் மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த வரிசையில், தாம்பரம் மாநகராட்சி முதலிடத்திலும், திருச்சி இரண்டாம் இடத்திலும் உள்ளது.
தற்போது வரிகட்டாதவர்கள், கட்டியவர்கள் அனைவருக்குமே நினைவூட்டல் அடிப்படையில் ‘நோட்டீஸ்’ அனுப்பும் நடைமுறை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கையாலே சொத்து வரி வசூலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

error: Content is protected !!