India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாதாந்திர விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாகவோ நேரடியாகவோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,024 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளில் 26 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளதாக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.149.55 கோடி மட்டுமே விற்பனையாகி உள்ளதாகடாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மதுரையில் கால்நடை கணக்கெடுப்பு பணி மாதிரி வரை திட்ட பணிகளை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மதுரை மாடக்குளம் முத்துப்பட்டியில் கால்நடை கணக்கெடுப்பு பணி விவரங்களை அவர் கேட்டிருந்தார். ஊமச்சிகுளம் திருப்பாலையில் மாதிரி வரைவு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மண்டல இணை சுப்பையன் துணை இயக்குனர் நந்தகோபால் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தின் மாநகர பகுதியிலான தெற்குவாசல் திருப்பரங்குன்றம் திலகர்திடல் செல்லூர் அண்ணா நகர் ஆகிய காவல் சரங்களின் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் உதவிக்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.
மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 31 காலை 10:30 முதல் மாலை 4:30 வரை சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. துணி துவைக்கும், பாத்திரம் விளக்கும், பறை துடைக்கும் திரவங்கள், ஊறுகாய் இயற்கை பானங்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 9865798420ல் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை மாநகராட்சி சிஎம்ஆர் ரோட்டில் உள்ள மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஜன.21) நடைபெற உள்ளது. மேயர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்பதால், பொது மக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
இந்திய அளவில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அதிகரித்துள்ள விமான சேவை, விமான பயணிகளின் வருகை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை உள்பட 6 விமான நிலையங்கள் தரம் உயர்த்துப்பட்டுள்ளது. மதுரை உயர்த்துப்பட்டுள்ளது. மதுரை தரத்தை மூன்றிலிருந்து ஏபிடி தரம் இரண்டிற்கு உயர்த்தப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முதல்வர் மதுரை மாநகரத்திற்கு 22.01.2025 அன்று வருகை வருகை தர இருக்கிறார். அன்றைய தினமே மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர மாவட்ட எல்லைக்குள் 22.01.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வளாகங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்பட்டது.
மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் நல்ல செழியன்(40). இவர் 3 வருடங்களுக்கு முன் பேரையூரில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இன்று அருகில் உள்ளவர்கள் துர்நாற்றம் வீச, உள்ளே சென்று பார்த்த போது பாதி அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.