India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்தி குறிப்பில்: 26.01.2025 (குடியரசு தினம்) அன்று மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 2025-26ஆம் நிதி ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால் மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்
மதுரை மாவட்டம், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 25.012025 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு *ஷேர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இடம் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளப்பட்டி விவசாயிகள் சுரங்கம் எதிர்ப்பு குறித்த தெரிவித்ததைத் அடுத்து நாளை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு நல்ல செய்தியாக வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜன 24 காலை நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன 10ம் வகுப்பு முதல் முதல் முதுநிலை பட்டப்படிப்பு பட்டயம் ஐடிஐ படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் www.tnprivatejops.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்லாம். ஜன 24 காலை 10 மணிக்கு கே புதூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் புதன்கிழமை காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து காா் மூலமாக மதுரைக்கு வருகிறார் காமராஜா் சாலையில் உள்ள வா்த்தக சங்கப் பவள விழா காலை 10.30 மணியளவில் நடைபெறும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசுகிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
மதுரை: சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மகிழ்ச்சிகரமான தகவல் நாளை மத்தியானத்திற்கு மேல் வர வாய்ப்பு இருக்கிறது” என்று நேற்று கூறினார். இதன் மூலம், இன்று மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஆணையை முழுமையாக ரத்து செய்து ஆணை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மதுரை மாநகரில் இன்று (21.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.
மதுரை மாவட்டத்தில் இன்று (21.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு 420 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மனுவாகவோ நேரடியாகவோ விவாதிக்க அறிவுறுத்தல்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் முருகன் (46) என்பவரை மாடு மார்பில் குத்தியதில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.