India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் மதுரையைச் சேர்ந்த போட்டோகிராபர் புதுமண தம்பதியினரை வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சர்ச்சையாகி உள்ளது. கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ள கோபுரம் பின்புறத்தில் தெரியும் வண்ணம், புதுமண ஜோடி அமர்ந்து திரைப்பட வசனத்தில் வரக்கூடிய மதுபானம் குறித்த வரிகள் அடங்கிய வசனங்களோடு ரீல்ஸ் எடுத்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி வரும் 25ம் தேதி மதுரை மாவட்டத்தில் நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள நெகிழி கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்க ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதையடுத்து மதுரை எம்பி.,சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு மகத்தான வெற்றி. எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சந்தித்தனர். இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நல்ல செய்தி வரும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் சாலை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை ஏற்படும் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று (ஜன.23) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விபத்தை தடுப்பதற்கு சென்னை தொழில்நுட்ப கழகத்தில் (IIT) உள்ள சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாட அறிவுரை கூறினர்.
மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து ஜன.10 முதல் 13 வரை தென் மாவட்டங்களுக்கு 467 பஸ்கள், பொங்கல் விடுமுறைக்குப் பின் ஜன.15 முதல் 20 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 605 பஸ்கள் இயக்கப்பட்டன. ஜன.20ம் தேதி ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இது கடந்த பத்தாண்டுகளில் அதிக வசூல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை : வேப்பங்குளத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகி காளையன் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து விசாரணை கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, காளையன் மர்ம மரணம் தொடர்பாக, பட்டியலினத்தவர்க்கான தேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மா புதன்கிழமை மதுரை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கள்ளிக்குடி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்கு உயிர்ப்பலி கொடுத்து சமைத்து சாப்பிட, போலீசார் தடைவிதித்துள்ள நிலையில், ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்புபோர்டு வாரிய தலைவருமான நவாஸ் கனியுடன் வந்தவர்கள், மலைப் படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.இதற்கிடையே மலை மீதுள்ள சமணர் குகையில் பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று(22.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.