India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நாளை 31.01.2025 காலை 10.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை சுய வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் திரவம், தரை துடைக்கும் திரவம், ஆரோக்ய இயற்கை பானங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி தரப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 98657 91420, 8610094881 என்னும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2024 ஆண்டு மட்டும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2,59,443 கடவுச்சீட்டுகளும், 20,545 காவல்துறை தடையின்மைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை முந்தைய வருடம் வழங்கியதை விட 14,033 கடவுச்சீட்டு அதிகமாகும். சாதாரண முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்த கால அவகாசத்தில் கடவுசீட்டு வழங்கபட்டு வருகின்றது.
மதுரை மத்தியசிறை கைதிகளுக்கு சக கைதிகளே கோழி வளர்த்து நேற்று 358 கிலோ சிக்கன் கறி வழங்கினர்.சிறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவுப்படி கைதிகளால் கோழிப்பண்ணை நடத்தப்படுகிறது. மதுரை சிறையில் 2000க்கு மேல் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புதன், ஞாயிறு சிக்கன் கறி வழங்கப்படுகிறது. இதற்காக 6 குடில்கள் அமைக்கப்பட்டு 1760 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில், இன்று (ஜன.29) மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகளை அறிவித்துள்ளார் விஜய். மதுரை மாவட்ட தவெக செயலாளராக ஏ.விஜய் அன்பன் கல்லணையும், பொருளாளராக ஈஸ்வரனும், துணைச் செயலாளர்களாக கிருஷ்ணசாமி மற்றும் விஜி தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலாடை பகுதி உள்ளது.இப்பகுதியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த பணியாளர் விருதை, சௌந்தர பாண்டியனுக்கு பொது மேலாளர் சிவகாமி வழங்கினார். அருகில் விற்பனை மேலாளர் சந்திரசேகர் உள்ளார். இதில் ஏராளமான ஆவின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, மதுரையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நேர விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3,000 பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2,000, மெட்ராஸ் மல்லி – ரூ.1,000, சம்மங்கி , செவ்வந்தி – ரூ.350, பட்டன் ரோஸ் – ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக் கூட்டம் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் இன்று (29.01.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாநகரின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் சார்ந்த 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலணி பெட்கிராட் நிறுவனத்தில் சணல் சார்ந்த இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூட்பேக், லேப்டாப் பேக், லஞ்ச் பேக், ஸ்கூல் பேக் உட்பட 17 வகையான பேக் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். பதிவு செய்ய 89030 03090 எண்ணில் முன்பதிவு செய்யலாம். *ஷேர்
தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன.29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் சாத்தப்பட்டது. மூலவர் சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட்டது. இன்று காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கண்டு தரிசிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.