Madurai

News February 12, 2025

மதுரை வரும் ஆந்திரா துணை முதல்வர்

image

மதுரை:  நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று(பிப்.12) தனது சனாதன தர்ம பயணத்தை கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ பரசுராம சுவாமி கோயில், அகஸ்திய ஜீவ சமாதி, கும்பேஸ்வரர் கோயில், சுவாமிமலை மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்கிறார்.

News February 12, 2025

மதுரையில் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி

image

கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் பழங்களில் குளிர்பானம் தயாரித்தல், ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி குறித்த கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்.15,16 ல் பழங்களில் இருந்து ஜூஸ், ஸ்குவாஷ், கிரஷ், குளிர்பான வகைகள் தயாரித்தல் பற்றியவை செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. *ஷேர் செய்யவும்

News February 12, 2025

மதுரையில் பிப். 27இல் பொது அறிவு வினாடி வினா

image

மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் 99440 97193 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மதுரைக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. *ஷேர்

News February 12, 2025

கட்டாய வசூலில் ஈடுபடும் மருத்துவமனை ஊழியர்கள்

image

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் மகப்பேறு சிகிச்சைக்கு தினமும் 200 பேர் வருகின்றனர். தினம் 50 முதல் 70 பிரசவம் நடக்கிறது. ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1500, பெண் குழந்தை பிறந்தால் ரூ.1000 என ஊழியர்கள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கர்ப்பிணிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். டீன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணிகள், உறவினர்களின் கோரிக்கை.

News February 12, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (11.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News February 11, 2025

திருப்பரங்குன்றம் கோவில் பற்றி தெரியாத உண்மை

image

பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சிவன் பரங்குன்றுநாதர் என்றும், தலம் பரங்குன்றம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன்தான். இவரை சத்தியகிரிஸ்வரர் என்று அழைக்கின்றனர். முருகன் தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால் முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு முருகன் கோவிலாக மாறிவிட்டது. மேலும், அறுபடையில் முதல் வீடும் இதுதான்.SHARE

News February 11, 2025

கூடைப்பந்து போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மதுரை சென்மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 16.02. 25 ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி இரு பிரிவுகளாக நடைபெற உள்ள நிலையில் 40 வயதிற்கு மேற்பட்டோர் ஒரு அணியாகவும் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஒரு அணியாகவும் விளையாட உள்ளனர். வெற்றி பெறுவோருக்கு கோப்பை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 96551 15565, 98948 45019 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2025

39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

image

மதுரை : சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 வழக்கறிஞர்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உரிமையில் வழக்குகளில் வாதாட 16 வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் வாதாட 7 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 11, 2025

ஜல்லிக்கட்டு பார்வையிட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

image

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் மைதானத்தில், ஜல்லிக்கட்டு பார்வையிட வரும் பார்வையாளர்கள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்கில் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம்

image

அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் இன்று (பிப். 11) ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார். இதில் 1,000 காளைகளை களமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குகிறது. காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!