Madurai

News February 13, 2025

மீண்டும் விழா கோலம் பூண்டுள்ள மதுரை

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி திருவிழா சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூவர், சந்திரசேகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும். இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழாவின் கொடியேற்றம் இன்று(வியாழக்கிழமை) காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News February 13, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (பிப்.12) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

புதிய டைட்டல் பூங்காவிற்கு நாளை அடிக்கல் நாட்டு விழா

image

மதுரையில் நாளை 13ம் தேதி புதிய டைட்டல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த டைடல் பூங்கா சுமார் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ₹289 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் ₹315 கோடி மதிப்பீட்டிலும் டைட்டல் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

News February 12, 2025

மருத்துவர்கள் பொறுப்புடன் பணியாற்ற கோர்ட் உத்தரவு

image

மதுரையில் 2011ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு தவறுதலாக நைட்ரஜன் ஆக்ஸைடு பயன்படுத்திய விவகாரத்தில் 6 மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. மருத்துவர்களின் ஜாமீன் மனு மீதான வழக்கை இன்று (பிப்.12) விசாரித்த நீதிபதிகள், மருத்துவர்கள் பொறுப்புடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.

News February 12, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், ஊமச்சிகுளம் ஆகிய காவல் சரகங்களில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

மதுரை Airport-ல் புதிய ‘வான்வழி கட்டுப்பாட்டு கோபுரம்’

image

மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ‘வான்வழி கட்டுப்பாட்டு தொழில்நுட்ப மையம்’ இன்னும் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொழில்நுட்ப கோபுரத்தின் மூலம் பயணிகளின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். அதிக விமானங்களை விரைவாக கையாளுவதிலும் சிரமம் இருக்காது எனவும் விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

News February 12, 2025

டாஸ்மாக் கடை முன்பு தூங்கிய போதை ஆசாமி பலி

image

மதுரை செல்லூர் வைகை பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மது அருந்திய ஒரு நபர் போதையில் கடை முன்பே தூங்கி விட்­டார். அப்போது அவ்வழி­யாக வந்த அடை­யாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்­பவ இடத்­தி­லேயே பலியானர். செல்லூர் வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2025

சுப்ரீம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு

image

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு 241 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, (25 ஆங்கிலவார்த்தைகள்/ நிமிடம்) தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு ஆகியன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, சென்னை, கோவை, வேலூர், புதுச்சேரி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.3.2025. <>*ஷேர்<<>>

News February 12, 2025

பிப்.14ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

image

அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.14ஆம் தேதி மாலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

News February 12, 2025

மதுரை வரும் ஆந்திரா துணை முதல்வர்

image

மதுரை:  நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று(பிப்.12) தனது சனாதன தர்ம பயணத்தை கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ பரசுராம சுவாமி கோயில், அகஸ்திய ஜீவ சமாதி, கும்பேஸ்வரர் கோயில், சுவாமிமலை மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்கிறார்.

error: Content is protected !!