Madurai

News February 16, 2025

மதுரையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

அனைத்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கே.கே.நகர் சென்ட்ரல் வங்கி முன்பாக மாலைநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், வார வேலை நாட்களை 5ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மதுரை நகர வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

மதுரை நெல்கொள்முதல் நிலையங்களில் வேலைவாய்ப்பு

image

நுகர்பொருள் வாணிப கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக பருவகால பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பில் கிளார்க், உதவியாளர், வாட்ச்மேன் என 450 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் துணை ஆட்சியர்/ மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம் என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பதை அஞ்சல் அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2025 *ஷேர்

News February 16, 2025

மதுரை மாவட்டத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

image

மதுரை திமுக வடக்கு மாவட்டம் சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பாக மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நாளை (பிப்.16) அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார். இந்த மாதத்தில் நடைபெறும் மூன்றாவது ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

மதுரை காவலர்களை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டு

image

மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த இ1 கோ.புதூர் (குற்றம்) காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் தலைமைக் காவலர் செந்தில் பாண்டியன் வழிப்பறி கொள்ளையனை விரட்டி பிடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

News February 15, 2025

லோடு இறக்கும் போது தொழிலாளி மயங்கி விழுந்து பலி

image

மதுரை ஆண்­டார்கொட்­டா­ரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (31). இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுவதுடன், லோடு­மேன் வேலையும் செய்து வந்­தார். இவர் இன்று (பிப்.15) காம­ரா­ஜர் சாலை­யில் பொரி கடலை மில் அருகே லோடு இறக்கி கொண்டிருந்­தபோது திடீ­ரென்று மயங்கி விழுந்து உயிரிழந்­தார். இது குறித்து தெப்­பக்­குளம் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

News February 15, 2025

கள்ளழகர் கோவில் ஸ்தல வரலாறு தெரியுமா?

image

மதுரை கள்ளழகர் கோவிலின் தனிச் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.? வாங்க சொல்றேன்.. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்று அழைக்கப்படும் இத்தலம் இளங்கோவதியரையர் என்னும் மன்னரால் கட்டப்பட்டது. இத்தலத்தில் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு எரிந்து கொண்டே இருப்பது கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு காணிக்கையாக கிடைக்கும் தானியங்களை மாவாக்கி தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. Share It.

News February 15, 2025

SJ சூர்யா படத்தில் மீண்டும் இணையும் டிக்டாக் பிரபலம்

image

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களும் பேசு பொருளாகி வரக்கூடிய வேலையில், மதுரையைச் சேர்ந்த டிக் டாக் பிரபலம் உதயா சுமதி ஏற்கனவே கானல் என்னும் திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 15, 2025

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

image

மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய சக்தி வேல், சென்னை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன்படி சென்னையில் மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழக பொதுமேலாளராக பணியாற்றிய ராகவேந்திரன் மதுரை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News February 15, 2025

மதுரை மாவட்டத்திற்கு புதிய நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நியமனம்!!!

image

மதுரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த ரவிக்குமார் பணி மாறுதல் காரணமாக சென்ற காரணத்தால் மதுரை மாவட்ட முத்திரைத்தாள் தனி ஆட்சியர் முத்து முருகேசன் பாண்டியனை புதிய அலுவலராக நியமனம் செய்து தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 28 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!