India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர் பணியிடங்கள் 4,256க்கு மொத்தம் 2,213 இடங்கள் காலியாக உள்ளது. சுமார் 50% காலிப்பணியிடம் உள்ளதால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். சென்ற 2017 முதல் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை <
மதுரையில் பல இடங்களில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையே மதுரை மக்களின் ஆசை என்ற வாசகத்துடன் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இதில், “தொப்புள்கொடி உறவில் விஷம் கலக்க துடிக்கும் விஷமிகளின் புறந்தள்ளிவிட வேண்டும்” என்ற வாசகம் அமைந்துள்ளது. இது ஒரு சில மதுரை மக்களின் மனநிலையை காட்டுகிறது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (17.02.2025) மாலை 4 மணிக்கு மதுரை மேலப்பொன்னகரத்தில் 21, 22, 57, 58 வார்டுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் 8 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்குகிறார். மாலை 4:25 மணிக்கு எஸ்.எஸ்.காலனியில் 60, 61, 75 வார்டு மாற்றுத் திறனாளிகள் 6 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்குகிறார். மாலை 4:50 மணிக்கு TPK சாலையில் ஸ்கூட்டர் வழங்குகிறார்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மாமன்ற உறுப்பினர்கள் அணியில் பங்கேற்ற மதுரை 79வது வார்டு மாமன்ற உறுப்பினர் லக்க்ஷிகா ஸ்ரீ சிறப்பாக விளையாடியமைக்காக அவருக்கு எம்.பி. தயாநிதி மாறன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதி சார்ந்த, பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட குறைகள் சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் வரும் பிப்.18ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் பங்கேற்று குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர்
மதுரை மாவட்டத்தில் இன்று(பிப்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சின்னம்மையின் (சிக்கன்பாக்ஸ்) தாக்கம் துவங்கியுள்ளது.பிப். 1 முதல் 15 வரை தோப்பூரில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சின்னம்மை, பொண்ணுக்கு வீங்கி (மம்ஸ்), நரம்பைத் தாக்கும் அம்மைத்தொற்று பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றும் 2 குழந்தைகள் சின்னம்மை, மம்ஸ் பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு உள்ளது.
மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.