India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் மஹபூப்பாளையம் பகுதி கோவில் பிள்ளை காலனி எதிரே குப்பைத்தொட்டி அருகில் 6 மாத பெண் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆம்புலன்ஸில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 6மாத இறந்த பெண் சிசுவை எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
மதுரையில் பலருக்கும் தெரிந்த மீனாட்சியம்மன் கோவில் தவிர கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள் பல உள்ளன.இம்மையிலும் நன்மை தருவார் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் ,கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்,ராக்காயி அம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டால் மனம் அமைதி பெரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 190 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.<
தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மார்ச் 21, 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. தளவாய் மதுக்குமாரி தலைமையில் மார்ச்.27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. மார்ச் 24 ஆம் தேதி ஏலத்திற்கு உண்டான காவல் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதனை தொடர்ந்து ஏலம் எடுக்க முன் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில்
இன்றும், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளையும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை சிலைமானில் அழகர்சாமி என்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் கடந்த 12-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்க கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தேடி வந்தபோது, ஒருவர் ஆளை மாற்றி அழகர்சாமியைக் காட்டியதால் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
மதுரை மாநகர பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை குறைத்து,குழந்தைகளுக்கு வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யவும் ,புகார் தெரிவிக்கவும் குழந்தைகள் உதவி எண் 1098 உதவிக்கு அழைக்கலாம் என மதுரை மாநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26, 27 ஆகிய 3 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ம் தேதியும் நடைபெற உள்ளது.*ஷேர்
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.