India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் ஊர்க்காவல் படைக்கு பணியாற்ற அக்.23ஆம் தேதி ஆள்சேர்ப்பு முகாம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த 20 முதல் 40 வயது உடைய இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமுக்கம் மைதானம் எதிரே ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக திடீர் நகர், கரிமேடு, கூடல் புதூர் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரிடமிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.16) ஒரே நாளில் 17 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்து பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை திருமங்கலம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாலமுருகன் என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மதுரை சிறப்பு போக்சோ நீதிமன்றம் அவருக்கு 24 ஆண்டு சிறை தண்ட தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 1 வருட சிறை தண்டனை என 25 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரையிலிருந்து துபாய்க்கு பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்ல 146 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது விமானத்தை இயக்க தயார் நிலையில் இருந்த விமானிகள் விமானத்தை ஆய்வு செய்த போது விமானிகள் அறை முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது தெரியவந்தது. இதனால் விமானம் இயக்க முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டு துபாய் செல்ல இருந்த 146 பயணிகள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள உருவச்சிலைக்கு மதுரை ஆதினம் இன்று(அக்.16)
மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம்: தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்று கூறினார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று(அக்.16) நடைபெற்று வரக்கூடிய வேளையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பதட்டமான ஒரு சூழ்நிலை காலை முதல் நிலவி வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று(அக்.15) திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காவல் துணை ஆணையர் (வடக்கு), மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) உடனிருந்தனர். புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மதுரை மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.18, காலை 11 மணிக்கு நடைபெறும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேற்று (அக்.15) அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.