Madurai

News October 10, 2024

கஞ்சா வழக்கில் மதுரை போலீஸ் கைது

image

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ், பழனியில் உள்ள, 14வது பட்டாலியன் தமிழக சிறப்பு படை காவலராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கொன்றில் கைதான சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிவாவிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் கஞ்சா வாங்கி வர சொன்னது பிரகாஷ் தான் என்று தெரிய வந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முன்தினம் பிரகாஷை கைது செய்தனர்.

News October 10, 2024

மதுரை மாவட்டத்தில் பனை விதை நடும் விழா

image

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் கரைகளை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் (வ.ஊ/கி.ஊ) தங்கள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்களில் கிராம பொதுமக்கள், ஆர்வமுள்ள கிராம இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரநிதிகள் மற்றும் மாணவர்களை பயன்படுத்தி பனைமர விதை நடுதல் நிகழ்ச்சியினை திறம்பட நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

News October 9, 2024

தகாத உறவை தட்டி கேட்ட கணவரை கொன்ற கொடூரம்

image

உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் சோனு பிரபாகரன். உணவக ஊழியரான இவரது மனைவி சாந்திக்கும், சாந்தியின் அக்கா கணவர் பிரபுவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த சோனு பிரபாகரன் இன்று பிரபுவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் சோனு பிரபாகரனை பிரபு திருப்பிளியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

News October 9, 2024

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை

image

ஜல்லிகட்டு, மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி மறுக்கும் அதிகாரம் காவல் துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என மேலூர் அருகே முசுண்டகிரிபட்டி கிராமத்தில் அக்.13 அன்று மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட கோரிய மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News October 9, 2024

சென்னை – கன்னியாகுமரி பண்டிகை கால சிறப்பு ரயில்

image

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து 2 இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகளுடன் கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06193) அக்டோபர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

News October 9, 2024

மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.10) மாலை 4.30 மணிக்கு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் பொதுமக்கள் நாளை நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களை குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் அணிவிப்பு

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் நவம்பர் 2 முதல் 14 வரை கந்த சஷ்டி விழா நடைபெறவுள்ளது. மேலும், ஐப்பசி பூரம் வரும் அக்.28ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன், உற்சவர் அம்பாளுடன் ஏத்தி இறக்குதல் நடைபெறுகிறது.
தீபாவளி திருநாளான அக்.31ம் தேதி காலை 6 மணி, மாலை 6.30 மணிக்கு, அம்மனுக்கு வைரத்திலான கிரீடம், தங்கத்திலான கவசம் சாத்தப்படுகிறது.

News October 8, 2024

மதுரை பேருந்து நிலையத்தில் புதிய ஏற்பாடு

image

மதுரை “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை” என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

News October 8, 2024

மதுரையில் கடைகளுக்கு கோடிகளில் அபராதம்

image

மதுரைமாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் நடத்திய போதை தடுப்பு குறித்த ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 24,175 கடைகளுக்கு ரூ. 1.19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், அனுப்பானடி பகுதியில் வீடுகளில் புகையிலை பொருட்களை ஹாட்பாக்ஸ்-ல் வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

News October 7, 2024

மதுரையில் மூக்கை உடைத்ததுக்கு கொலை

image

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரவன் என்ற குட்ட அஜித் நேற்று செல்லூர் எல்ஐசி பாலம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை இன்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஓராண்டிற்கு முன் கதிரவன் தன்னை தாக்கி மூக்கை உடைத்ததாகவும் அதன் காரணமாக அவரை பழிக்கு பலியாக கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!