India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் பாலமுருகன்(31). மது போதைக்கு அடிமையான இவர் எப்போதும் மது மயக்கத்திலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டு பாத்ரூமிற்கு சென்றவர் அங்கு தடுமாறி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராஜ்குமார் (48). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கருப்பாயூரணி பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆட்டோவில் சுருண்டு விழுந்து பலியானார். அவர் மனைவி ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெருங்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அருணாச்சலம்(32 ), சௌராஷ்டிர காலனி கார்த்திக்(28), சக்திவேல்(23) தண்யாயுதபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்தது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகிள்ளது. செங்கோட்டை விரைவு ரயில் (16848) ஜனவரி 2, 3, 4, 5, 6 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை வழியாக இயக்கப்படும். குருவாயூா் விரைவு ரயில் (16128) ஜனவரி 1, 2, 3, 4 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையத்தை தவிா்த்து, மானாமதுரை வழியாக இயக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.