India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்வுக்கு என்னென்ன வாகனங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம், காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களிலும் செல்ல அனுமதிக்க கோரி உசிலம்பட்டி சங்கிலி தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
➤ உலக உடற்காய தினம், மதுரை அரசு மருத்துவமனை,காலை 11 மணி
➤ இலவச தீபாவளி புத்தாடைகள் உணவு வழங்கும் நிகழ்ச்சி, நகர்புற வீடற்றோர் தங்கும் இல்லம், தானப்ப முதலி தெரு, காலை 11 மணி
➤ சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், காந்தி மியூசியம், காலை 10.30 மணி
➤ பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, கென்னட் கிராஸ் ரோடு, காலை 9 மணி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்தா மருத்துவ பட்டய படிப்பு படித்த மாணவர்கள் சித்த மருத்துவராக பயிற்சி செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறை இதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், முறையாக பயிலாமல் சித்த மருத்துவர்களாக பயிற்சி செய்தால் அது சமூகத்திற்கு அழிவைத் தரும் என கருத்து தெரிவித்துள்ளது.
அதிக காற்றழுத்தம் மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் மழைப்பொழிவு இருப்பதால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதிகாரிகள் தகவல். சிறிது நேரத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பெங்களூர் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் சென்னை விமானம் சிறிது நேரத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் தரையிறங்க இருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழையின் காரணமாக நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக மதுரை அருகே உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.மழை நின்ற பிறகு விமான நிலையத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : கர்நாடகா, ஹூப்ளி ரயில் நிலையத்தில் இருந்து அக்.26ஆம் தேதி எண் 07313 மாலை 3.15க்கு கொல்லம் சிறப்பு ரயில் புறப்படும். மறுநாள் மாலை 5.10க்கு கொல்லம் ரயில் நிலையம் சென்றடையும்.கேரளா, கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து அக்.27ம் தேதி இரவு 8.30க்கு 07314 ஹூப்ளி சிறப்பு ரயில் புறப்படும், மறுநாள் இரவு 8.45க்கு ஹூப்ளி வந்து சேரும். இந்த ரயில் திண்டுக்கல், மதுரை நிலையங்களில் நின்று செல்லும்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் வழக்கின் விசாரணை அதிகாரியான விஜயகுமார் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதால் இந்தி & தமிழ் அறிந்த மொழி பெயர்ப்பாளரை நீதிமன்றம் நியமிக்க குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை அதிகாரி விஜயகுமார் சுக்லா கால அவகாசம் கோரியதால் விசாரணையை நவ.6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர். ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் “மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்றார்.
மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவருமான சிவகடாட்சம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி Toll Free தொலைபேசி எண்ணை 15100 துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் ஏழை மக்களுக்கு இந்த சேவை மையம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
➤வியுகம்-2024 ஏழு நாள் சிறப்பு முகாம், காலை முதல், சமூக அறிவியல் கல்லூரி
➤ இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, ஒட்டல் வெஸ்டர்ன் பார்க், காலை 9.30 மணி,
➤பேச்செனும் பெருந்தெய்வம் கருத்தரங்கு, கலைஞர் நூலகம், மாலை 5 மணி
➤தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, உலக தமிழ்ச்சங்கம், காலை 10.30 மணி
➤மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி அலுவலகம், காலை 10.15 மணி
Sorry, no posts matched your criteria.