India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகமலை புதுக்கோட்டை அருகே கரடிபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் அங்காள ஈஸ்வரி(13). வடபழஞ்சி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இம் மாணவி நேற்று(நவ.9) இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வயல் பகுதியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று இவரை தீண்டியது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக இருப்பதால், நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் நேற்று(நவ.10) ஒரே நாளில் 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள். புறநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சமடைய தேவை இல்லை என மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த மே மாதம் எழுதப்படிக்கத்தெரியாதோர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மொத்தம் 27,735 பேர் எழுத படிக்க தெரியாதவர்களாக கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜீன்.15 முதல் 1630 எழுத்தறிவு மையங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் நவ.10 அன்று மதுரையில் உள்ள அனைத்து ஆரம்ப & நடுநிலைப்பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை எழுத்தறிவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கொல்லம் மாவட்டம் புனலூர் ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் புனலூர் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் அழப்புழாவை சேர்ந்த பிரசன்னன்(52) என்பவர் ரூ.35.92 லட்சம் ஹவாலா பணத்தை ரயிலில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மதுரையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று (நவ.9) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் முகாமில் 80க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 2000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்ய உள்ளதால் வேலை தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். *SHARE*

மதுரை மாவட்டத்தில் இன்று(நவ.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பெத்தனாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணம் தயாரித்து பட்டா போட்டு விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் தென்காசி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காந்தி மியூசியத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி “மதுரை இயற்கை சந்தை” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இயற்கை விவசாய உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அறிவும் பண்பும் கலந்தது கல்வி‘ என்ற தலைப்பில் குழந்தைகள் பெற்றோர்களுடனான கலந்துரையாடல், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, மரப்பு போட்டிகள் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.