Madurai

News January 28, 2026

மதுரை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

மதுரை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

image

சோழவந்தான் இரும்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 35, இவரது மனைவி விஜய பிரபா 28. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜய பிரபாவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த விஜய பிரபா சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோழவந்தான் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை.

News January 28, 2026

மதுரை தெப்ப திருவிழா பணிகள் தீவிரம்

image

மதுரை, தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30 பணியாளா்கள் இந்தப் பணியை தொடா்ந்து செய்து வருகின்றனர்.

News January 28, 2026

மதுரை : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

மதுரை பாலத்தில் தூங்கியவர்; தவறி விழுந்து பலி

image

மதுரை, சோழவந்தான் அருகே முதலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ராமன் இவர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள பாலத்தில் படுத்து தூங்கியபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனையறிந்த கிராம மக்கள் ராஜாராமனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு சிகிச்சை ராஜாராமன் உயிரிழந்தார். இதுக்குறித்து விக்ரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 28, 2026

மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை

image

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதியில் வடலூர் வள்ளலார் தினத்தை முன்னிட்டு பிப்.1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. விற்பனை கடைகளை திறக்கவும் கூடாது, மீறி விற்பனை செய்தால் இறைச்சிகளை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News January 28, 2026

மதுரை : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

மதுரை: பெட்ரோல் குண்டு வீசிய போலீசார் மீது வழக்கு

image

கள்ளிக்­குடியை சேர்ந்­த­ மாணிக்­கத்திற்கும் அவரது உற­வி­னர்­க­ளுக்­கும் சொத்து பிரச்­சினை காரணமாக, அரி­வாள், கத்தியுடன் வீடு புகுந்து மாணிக்­கத்தை நேற்று முன்தினம் தாக்கி, பெட்­ரோல் குண்டை வீசி­னர். சென்னை ஆயு­தப்­படை போலீ­ஸ் மருது­பாண்டி(29), பெரியசாமி(55), சின்ன மாரிச்­சாமி(50), சூர்யா(32) உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.

News January 28, 2026

மதுரை மக்களே பண்டிகைக்கு ரெடியா?

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 26, திருக்கல்யாணம் 28, தேரோட்டம் 29-ல் நடைபெறுகின்றன. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

News January 27, 2026

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!