India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரையிலிருந்து சென்னைக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானத்தில் தனது இருக்கையிலேயே தவற விட்டார். செல்போன் குறித்து ஞாபகத்திற்கு வந்தவுடன் உடனடியாக போலீசாரிடம் கூறிய நிலையில், சுமார் 40 நிமிடங்கள் கழித்து செல்போனை கண்டுபிடித்து ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 150 நாட்களாக இயங்கி வந்த தவெக விலையில்லா உணவகம், அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி மதுரை மாநகராட்சி இன்று(நவ.11) அகற்றியது. தினமும் நூற்றுக்கணக்கான சாலையோர வசிப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் என பலரும் பயன்பெற்ற உணவகத்தை அகற்றியது கண்டனத்துக்குரியது என்று தவெகவினர் கூறுகின்றனர்.

சத்திரப்பட்டி அருகே மஞ்சம்பட்டியில் தனியார் ரிசார்ட் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை செய்ததில் சிலர் போதைப்பொருள் பயன்பாட்டுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 26 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் சப்ளை செய்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறுகையில், ”இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு. நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம். நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் நகலுடன் அருகேயுள்ள பொதுச் சேவை மையங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்யலாம். இதற்கு நவம்பர் 15 கடைசி” என்றார்.

மதுரை கிழக்கு தொகுதி யா.நரசிங்கத்தில், இறந்த ஒருவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு நேற்று(நவ.10) கொண்டு சென்றனர். அப்போது மின்சார விளக்குகள் இல்லாத காரணத்தால் செல்போன் வெளிச்சம் மூலம் அடக்கம் செய்துள்ளனர். அப்போது பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் அடக்கம் செய்ய வருபவர்கள் செல்போன் மூலமாக டார்ச் லைட் அடித்து உடல்களை அடக்கம் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே நிலையத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் நவ.14ல் மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் நவ்யுக் விரைவு ரயில் (16788), நவ.17ல் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் வாராந்திர ரயில் (16353) ஆகிய இரு ரயில்களும் திருச்சி செல்லாமல் கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள ஒயின்ஷாப் பகுதியில் ஒரு வாலிபர் ஒருவர் இன்று(நவ.10) கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாட்டிலை உடைத்து அவர் கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய சத்திரப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அருகில் நின்ற டூவீலர் சிவகங்கை மாவட்ட பதிவெண் என்பதால் இறந்த நபர் சிவகங்கையை சேர்ந்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்

மதுரை பச்சரிசிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நிமிசந்த் ஜெயின். இவரது மகன் சஞ்சய் குமார் ஜெயினுக்கு(30) மதுப்பழக்கம் இருந்துள்ளது. இன்று(நவ.10) குடிபோதையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திடீர்நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

பிரபல எழுத்தாளரும் சிறந்த சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்திரராஜன் இன்று(நவ.10)காலை வீட்டில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்தவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் உடலுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.