Madurai

News November 14, 2024

ஆன்லைன் மோசடி மதுரை எஸ்பி அறிவுரை

image

ஆன்லைன் மோசடி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,  பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cvbercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம் என மதுரை எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன்

image

 பீ.பீ.குளம் அருகில் முல்லைநகர் பகுதியில் சுமார் 592 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த பகுதியில் உள்ள மக்கள் காலி செய்யப்படவேண்டும் என்றும், மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை ஒத்தி வைத்திட தேவையான சட்ட முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

News November 13, 2024

இரவு நேர குற்ற சம்பவம் குறித்து புகார் அளிக்கலாம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று( 13.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக எஸ்பி,. அறிவித்துள்ள காவல் துறையினரின் அலைபேசி எண்களுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 13, 2024

கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அழகுமணி (23). இவர் தனது நண்பர்களுடன் விளாச்சேரி கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அழகுமணி  உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட நாகமலை புதுக்கோட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2024

பெண்களை பாதுகாக்க மதுரை போலீஸ் புதிய திட்டம்

image

மதுரையின் மாநகரில் 185 பள்ளிகள் மற்றும் 25 கல்லூரிகளுக்கு மகளிர் காவல் தொடர்பாளர் நியமிக்கப்பட்டு வாரம் ஒரு முறை கலந்துரையாடி உளவியல், பாலியல், போதைப்பொருள், குடும்ப மற்றும் சமூக ரீதியான பிரச்சனை இருப்பின் அவற்றை கண்டறிந்து அதற்கு தீர்வு காண ஆலோசனை வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் பகிரப்படும் தகவல் ரகசியம் காக்கப்படும்.

News November 13, 2024

மதுரை இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.15 அன்று நடைபெற உள்ளது. முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத்தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தல்.

News November 13, 2024

மதுரையிலிருந்து பம்பைக்கு மிதவை பேருந்து

image

மதுரையில் இருந்து நவ.15 முதல், ஜனவரி 18 வரை தினமும் அதிநவீன மிதவை பேருந்து (அல்ட்ரா டீலக்ஸ்) இயக்கப்பட உள்ளது. தினமும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு தேனி வழியாக பம்பைக்கு இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ‘ஆன்லைன்’ மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC யின் அதிகாரி பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News November 13, 2024

மதுரையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முகாம்

image

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப்பட்டியல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிறு (நவ.16,17) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இந்த பணிக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 1,165 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிற திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

மதுரையில் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

image

மதுரையில் நேற்று(நவ.12) 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் மதுரை விமான நிலையத்தில் ‘எம் பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை தொடர்ந்து செய்யப்படுகிறது. இதுவரை யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.

News November 13, 2024

மதுரையில் ஒரே நாளில் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

image

மதுரையில் நேற்று 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மிருக காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!