Madurai

News January 31, 2026

மதுரை – பிப்ரவரி 1 அன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் பிப்1 மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகளும் மூடப்படும்

News January 31, 2026

மதுரையில் சோகம்… ஸ்டவ் பற்ற வைத்த போது பெண் கருகி பலி.!

image

மதுரை தங்­கம் நகரை சேர்ந்­த­வர் வினோத்குமார் மனைவி புவ­னேஸ்­வரி( 27).
நேற்று சமை­யல­றை­யில் ஸ்டவ் பற்ற வைத்த போது புவனேஸ்­வ­ரி சேலை­யில் தீ பற்றியது . தீயை கணவர் அணைக்க முயல, அவரும் தீக்­கா­யம் அடைந்­தார். இருவரும் அரசு மருத்துவம­னை­யில் சேர்க்கப்பட அங்கு சிகிச்சை பலனின்றி புவ­னேஸ்­வரி உயிரிழந்தார். வினோத் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வருகிறது. தெப்­பக்கு­ளம் போலீ­சார் விசாரணை.

News January 30, 2026

மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணு

News January 30, 2026

மதுரை: இனி Whatsapp ல் சிலிண்டர் BOOK பண்ணுங்க..

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News January 30, 2026

மதுரை: Whatsapp யூஸ் பண்றீங்களா? தெரிஞ்சுகோங்க!

image

உங்கள் வாட்ஸ் ஆப்-ல் தேவை இல்லாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருகிறதா?

1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.

2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.

3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.

4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!

இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 30, 2026

மதுரை: SBI வங்கி வேலை; ரூ.48,480 மாத சம்பளம்!

image

மதுரை மக்களே; SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்களுக்கு மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. தகுதியானவர்கள் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். *வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

image

கோரிப்பாளையம், தல்லாகுளம், நரிமேடு, போஸ் வீதி, குலமங்கலம் மெயின் ரோடு, மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணா நகர், மேலமடை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலணி, சூர்யா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை & கருப்பாயூரணி, மேலூர், வாடிப்பட்டி, பைபாஸ், திருமங்கலம் ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரம் முழுவதும் நாளை(ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. *ஷேர்

News January 30, 2026

மதுரை: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம்

image

மதுரை, யாகப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(59). இவர் மனைவி இறந்த நிலையில் (குழந்தைகள் இல்லாதவர்) வழிப்பு, மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது அண்ணன் கணேசன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணன் வீட்டார் குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில் பூட்டியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. இந்த புகாரின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மோகன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

News January 30, 2026

மதுரை: வாகனங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?

image

வாகன உரிமையாளர் வாகனத்தை விற்க, பரிசளிக்க or மரணத்திற்குப் பின் உரிமை மாற்ற விரும்பினால், வாகன வகைக்கு ஏற்ப RTO அல்லது STA மூலம் உரிமை மாற்றம் செய்யலாம். ஆம்னி பஸ் தவிர அனைத்திற்கும் RTO அதிகாரம் உடையது. உரிமையாளர் மரணமடைந்தால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் & NOC அவசியம். செகண்ட் ஹாண்ட் வாகனங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்வது கட்டாயம். பெயர் மாற்றம் செய்ய <>CLICK<<>> *ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

மதுரை: ஜல்லிக்கட்டு காளை நீரில் மூழ்கி பலி

image

அலங்காநல்லூர், கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1137 காளைகள், 505 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது, பாலமேட்டினை சேர்ந்தவரின் காளை தப்பி ஓடி பெரியாறு பாசன கால்வாய் கண் ஷட்டரில் விழுந்தது. நீரில் இழுத்துச் செல்லப்பட்ட காளை மூழ்கி உயிரிழந்தது. காளையை மீட்ட உரிமையாளர் அப்பகுதியில் அடக்கம் செய்தார்.

error: Content is protected !!