Madurai

News February 2, 2026

மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

image

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

சார்பதிவாளருக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டம்

image

திருமங்கலம் செக்காரனூரணி சார்பதிவாளராக உமாதேவி உள்ளார். இவர் அங்கீகாரம் இல்லாத பத்திரப்பதிவுகளுக்கு சென்ட்க்கு ரூ.10,000 வீதம் பட்டா மாறுதல் இல்லாத பதிவுகளுக்கு சொத்து மதிப்புக்கு ஏற்ப ரூ.20000 முதல் ரூ.50000 லஞ்சம் பெறுவதாக கூறி அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News February 2, 2026

மதுரை: ரூ.12 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

image

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் கழக மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஏழுமலை, உத்தபுரம், உசிலம்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, சோழவந்தான், விக்ரமங்கலம், செக்கானூரணி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, பாலமேடு பகுதியில் பலர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்தனர்.

News February 2, 2026

மதுரை: டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி

image

எழுமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டி மகன் ஹரிவர்ஷன்(9). இவர் நேற்று முன்தினம் எழுமலை சாலையில் சைக்கிளில் சென்றபோது, வண்ணாத்தி கோவில் அருகே பின்னால் வந்த டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஹரிவர்ஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பேரையூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முகேஷ்(20) என்பவரை கைது செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

மதுரை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

மதுரை: விளையாட்டு விபரீதமானது; ஒருவர் பலியான சோகம்

image

மதுரை முத்துப்­பட்டியை சேர்ந்­த­ கணே­சன் (44) கட்டிட வேலை பார்த்து வந்­தார். தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்தார். இவர் ஏற்­க­னவே 2 முறை தற்­கொ­லைக்கு முயன்று அவரை காப்­பாற்­றி விட்­ட­னர். இன்று அதிக குடி போதை­யில் வந்து தற்­கொலை செய்து கொள்­ளப் போவதாக சேலையை கழுத்தில் சுற்றி கொண்டு நின­ற­ போது தவறி விழுந்து உயிரிழந்­தார். சுப்­பி­ர­மணியபு­ரம் போலீசார் விசா­ரிக்கின்றனர்.

மதுரை: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

image

காடுப்பட்டிகோவில் குருவிதுறையை சேர்ந்தவர் காசி மனைவி ஜீவிதா(21). இவர்கள் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜீவிதா வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் பேசாமல் இருந்து வந்தனர். இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த ஜீவிதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News February 2, 2026

மதுரை காவல்துறை போதைத் தடுப்பு விழிப்புணர்வு

image

மதுரை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகிறது. “போதைப் பொருட்கள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த விட வேண்டாம்” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் இருந்தால் 91760-79100 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. “Just Say No to Drugs” என்ற கோஷத்துடன் விழிப்புணர்வு வலுப்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!