India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை அருகே மேலசாளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தைப்பூச திருவிழாவையொட்டி மேலூர் அருகே செம்மனிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு காண தனது நண்பருடன் வந்தார். அப்போது மாடு முட்டியதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் உள்ள பழனிக்குமார், ஜெயப்பிரியா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்த பாலா என்பவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக மதுரை முல்லைநகர் பகுதியில் வசித்ததுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மனைவி பிரிவால் கவலையில் மது அருந்தி வந்தாக தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை பிபி குளம் டாஸ்மாக் கடைபாரின் ஆஸ்பெட்டாஸை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, மது குடித்த நிலையில் பின்னர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 9-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கல்வித்தகுதிக்கேற்ப மாதம் ரூ.200 முதல் ரூ.600 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையும் உதவித்தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் (மாற்றுத்திறனாளிகள் 1 ஆண்டு) நிறைவு செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் இன்று (03.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று (3.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

திருமங்கலம் அருகே திடியன் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(19). இவர் மதுரையில் தனியார் நிறுவன வேலைக்கு தினசரி செல்ல டூவீலர் வேண்டும் என தனது தாயாரிடம் கூறி வந்துள்ளார். வீடு கட்டியதால் ஏற்பட்ட கடன் காரணமாக தற்போது டூவீலர் வாங்க முடியாது என தாயார் கூறியதால் விரக்தியடைந்த பரமசிவம் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.