India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, பனங்காடியைச் சேர்ந்தவர் +2 மாணவர். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களாக அவரை சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியரிடம் மாணவனின் தந்தையும், சித்தப்பாவும் புகார் அளித்தனர். அப்போது அவரது சித்தப்பா மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். தலைமையாசிரியர் இருதரப்பையும் கண்டித்தார்.
தமிழகத்தில் 37,579 அரசு பள்ளிகளில் 8 ஆயிரம் பள்ளி கட்டடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் மதுரை டாக்டர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இதை சரி செய்வோம்’ என உறுதி அளித்தனர். இதுவரை எத்தனை பள்ளிகளை சரி செய்தார்கள் என புள்ளி விபரம் வெளியிடப்படவில்லை. 37,579 பள்ளிகளுக்கு ரூ.3,758 கோடியை ஒதுக்கினால் சீர் செய்யலாம் என்றார்.
மதுரை மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சேமிப்புப் பத்திரத்துடன் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் மணிமண்டப பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று (நவ.20) மதுரை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரம் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமயநல்லூர், ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் போன்ற மதுரை மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரங்கள் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஒரு பக்கம். விமான நிலைய வளர்ச்சி மற்றொரு பக்கம். மக்கள் நலனையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் சமநிலைப்படுத்தி இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும் என நம்புகிறோம். மேலும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமயநல்லூர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை, திண்டுக்கல், சமயநல்லுார் சாலையில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயமடைந்ததாக காவல் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (நவ.20) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இன்று (நவ.20) வரை சுமார் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மதுரை சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தநிலையில், அவர்ளை வெளியேற்ற வேண்டாம், நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும், நோட்டீஸை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம், அதுவரை நடவடிக்கை கூடாது என தெரிவித்து ஆட்சியர் பதில் தர உத்தரவு.
Sorry, no posts matched your criteria.