India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், வருவாய், வேளாண், கூட்டுறவுத்துறைகள் சார்பாக 442 பயனாளிகளுக்கு ரூ.2.76 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.100 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளின்போது டெங்கு கொசு புழு உருவாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்த 15 நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய மூர்த்தி அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக இன்று உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேடி வருகின்றனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிச.13 அன்று நடைபெற உள்ளது. இதில் பக்தர்களின் வசதிக்காக மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருக்கார்த்திகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக டிச.13 முதல் டிச.15 வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
மதுரை மாநகராட்சி துணை கமிஷனர்கள் தயாநிதி ஓய்வு பெற்றார், சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சிக்கு துணை கமிஷனர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால் மாநகராட்சி கமிஷனருக்கு பணிச்சுமை அதிகரித்தது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இருந்த கே. சிவக்குமார் மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிருநாளில் பொறுப்பேற்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.