India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மத்திய சிறையில் கைதிகளை கொண்டு மருத்துவ பேண்டேஜ் , ஆபிஸ் கவர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். மூலப்பொருட்கள் பல்வேறு வர்தகர் மூலம் பெறப்பட்டன. சில நிறுவனங்கள் பொருட்கள் வழங்கியதாக போலி பில்களை சிறை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளன. இதில் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாநகரில் இன்று(14.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
மதுரை மாவட்டத்தில் இன்று(டிச.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணிய சுவாமி கோவில் சரவண பொய்கை மலை மீது நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மலைமீது பழமையான மல்லிகா அர்ஜுனா லிங்குசாமி கோயில் உள்ளது. நான்கரை அடி தீபக் கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தினை பேரையூரை சுற்றியுள்ள பகுதி மக்கள் வீட்டு மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் டிச.21 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.பங்கேற்க விரும்புவோர் முன்பணமாக டூவீலருக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை டிச.17 முதல் 19 வரை மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
மதுரை மாநகர இரவு ரோந்து பணி(டிச.13) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு தெற்கு வாசல் கோவில். தெற்கு வாசல், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர், அண்ணா நகர், போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவலர்களின் பட்டியல் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று(டிச.13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கார்த்திகை விழா டிச.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் இரு வேலைகளில் சாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இன்று(டிச.13) மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் திருப்பரங்குன்றம் மலை மீது எண்ணெய் சட்டிகள் கொப்பரைகள் எடுத்துச் செல்லப்படுகிறது.
மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு கண்டன பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, ஒரு போதும் இம்மண்ணில் மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன் சுரங்கங்கள் அமைவதை ஏற்க முடியாது. இதற்காக வழக்கு, சிறை என்றாலும் எங்களுக்கு பயமில்லை என பேசினார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று முருகப்பெருமான் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தொடர் மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.