Madurai

News December 16, 2024

மதுரை: ரயில் நிலையம் முன்பு போராட்டம் – அதிரடி கைது

image

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, ஐக்கிய விவசாயிகள் சங்கம் (NP) சார்பில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உயிருக்கு போராடி கொண்டிருக்கும் SKM(NP) தலைவர் டல்லேவால் அவர்களுக்காகவும், விவசாயிகள் வாழ்வுரிமையை காப்பதற்காகவும் இன்று (டிச.16) மதுரை ரயில் நிலையம் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

News December 16, 2024

திருமாவளவனுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை- எ.வ வேலு 

image

கோரிப்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும், அப்போலோ உயர்மட்ட மேம்பால பணி2025 அக்டோபருக்குள் முடிவடையும்.2001 ஆம் ஆண்டு முதல் திருமாவளவனுடன் பழகி வருகிறேன், எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர், விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை என எவ வேலு பேட்டியளித்தார்.

News December 16, 2024

புதுப்பொலிவு பெறும் ரேஸ்கோர்ஸ் மைதானம்

image

மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் செயற்கை தடைகளை ட்ராக் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2006 இல் அமைக்கப்பட்ட 400 மீட்டர் செயற்கை ட்ராக் காலாவதியான நிலையில் 2023ஆம் ஆண்டில் 8 கோடி மதிப்பீட்டில் புதிய டிராக்டர் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இன்னும் இரண்டு மாதத்தில் டிராக் பணிகள் அனைத்தும் முடிந்து வீரர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

News December 16, 2024

IPL-இல் மதுரையை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை

image

மதுரை : 3வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது.இதில் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜி. கமாலினி யை, மும்பை இந்தியன்ஸ் அணி 1.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கமாலினி 3 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை வந்து விட்டார்.

News December 16, 2024

மதுரையில் நாளை மின்தடை

image

மதுரையில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதந்திர பணிகள் நாளை நடைபெறவுள்ளது. அதன்படி அவனியாபுரம் பஸ் நிலையம் ,செம்பூரணி சாலை, ரிங் சாலை, பாம்பன் நகர், மண்டேலா நகர், பெருங்குடி சின்ன உடப்பு, பாலமேடு மெயின் ரோடு ,புது விளாங்குடி, கூடல் நகர், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, கரிசல்குளம், பாசிங்காபுரம். வாகைகுளம் கோவில், பாப்பாகுடி, வண்டியூர், விரகனூர் நகர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

News December 16, 2024

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

மதுரை விமான நிலையம், மத்திய சிறைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.சென்னை, மதுரை, திருச்சி ஆகிய காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அழைப்பு எண் ஒரே எண்ணாக இருந்தது.சைபர் கிரைம், க்யூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் ஒன்றிணைந்து கால் டீட்டெய்ல்ஸ் மற்றும் லொக்கேஷனை ஆய்வு செய்து, கரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த தங்கம் என்பவரை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

News December 15, 2024

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று(டிச.15) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News December 15, 2024

மதுரையில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

image

மதுரை முழுவதிலும் விசிக வைக்கப்படும் கொடி கம்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி வழங்குவதில்லை என திருமாவளவன் குற்ற சாட்டியிருந்தார். வெளிச்ச நத்தத்தில் கொடி கம்பம் வைத்து விவகாரத்தில் 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அது திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் வரும் டிச.23ஆம் தேதி மதுரையில் ஆட்சியர் சங்கீதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

News December 15, 2024

பெற்றோரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை அருகே பாலமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(28). திருமணம் ஆகாத நிலையில், அவரது தாய், தந்தை சமீபத்தில் இறந்த நிலையில் தனித்து வாசித்து வந்தார். இதனால் மதுவிற்கு அடிமையான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலமேடு போலீசார் இவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராக புதிய வழக்கு

image

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில்,” அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் ” ” எனக் கேட்டு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!