Madurai

News December 18, 2024

மதுரையில் இன்று பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

மதுரையில் இன்று(டிச.18) காலை 10:30 மணிக்கு காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்களை தவறவிட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மூலமாக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது.

News December 18, 2024

முதல்வருக்கு நன்றி – மீனாட்சி அம்மன் அறங்காவலர் குழு தலைவர்

image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சமீபத்தில் சட்டபேரவையில் உறுதியளித்ததற்காக மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் குடும்பத்தினருடன் முதல்வரை இன்று (டிச.17) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

News December 17, 2024

மதுரை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர நேரத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

அதிமுகவை பாஜக அழிக்க நினைக்கவில்லை – டிடிவி 

image

மதுரையில் இன்று (டிச.17) செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்; பாஜக அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. 2026-ல் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை, மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது என்றார்.

News December 17, 2024

வண்டியூர் தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

image

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் உடல் ஒன்று கிடப்பதாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதனையடுத்து 25 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவரின் உடலை மீட்ட தெப்பக்குளம் போலீசார் மீட்டனர். தெப்பக்குளத்தில் மூழ்கி இறந்தது யார்? போலீசார் வி.ஏ.ஓவிடம் புகாரை பெற்று தற்கொலையா, வேறு காரணமா என அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2024

ரயில்வே பிளாட்ஃபார்மில் மல்லிகை பூ விற்பனை

image

மதுரையில் உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” விற்பனையகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது.மதுரையின் பொருளான “மல்லிகை” மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் தற்போது விற்பனையாகிறது.

News December 17, 2024

கோரிப்பாளையம் மேம்பால பணி- போக்குவரத்து மாற்றம்

image

மதுரை மக்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த போக்குவரத்து காவல்துறைமதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய மேம்பாட்டிற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. கோரிப்பாளையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப மூன்று பாதைகளை மாற்றி அமைத்து இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News December 17, 2024

குட்லாடம்பட்டி தடாகை மலை ‘Trek Tamilnadu’ திட்டத்திற்கு தேர்வு

image

Tamil Nadu Wilderness Experience Corporation, வனத்துறை இணைந்து மலை ஏற்றத்தை ஊக்குவிக்க ‘Trek Tamilnadu’ என்ற திட்டம் உள்ளது. இதற்கு மதுரை குட்லாடம்பட்டி தடாகை மலையேற்ற பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மலை ஏற்றம் வனத்துறை அலுவலர்களின் உதவியோடு நடைபெறும். தகவல் அறிய https://www.trektamilnadu.com/ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

டங்ஸ்டன் விவகாரம் – தொடர் போராட்டம் நடத்த முடிவு

image

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் செய்யப்போவதாக அரிட்டாபட்டி மக்கள் தற்போது அறிவித்துள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் மலை மீது அமர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 16, 2024

மதுரை ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை தங்கள் மாவட்டங்களில் நடைமுறையில் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

error: Content is protected !!