India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபரிமலை சீசனை முன்னிட்டு மதுரை வழியாக செகந்திராபாத் கொல்லும் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் வரும் ஜன.16 வரை இயக்கம். இரு மார்க்கத்திலும் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு. அதன்படி வியாழன் இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் இரவு 8:48 கடையநல்லூரில் நிற்கும், சனிக்கிழமை கிளம்பு ரயில் காலை 9:48க்கு நின்று செல்லும்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் நடத்தும் TfMA-TRADE FAIR 2024 பொருள்காட்சி தமுக்கம் மாநாட்டு மைதானத்தில் வரும் டிச.22,23,24,25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பொருட்காட்சியில் குலுக்கல் முறையில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஆன பரிசுகள் வழங்கப்பட உள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மதுரை தெற்கு கோட்ட அலுவலகத்தில் இன்று (டிச.19) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை பெரு நகர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மின்செயற் பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 533 செல்போன்கள் மதுரை மாநகர சைபர் போலீஸ் உதவியுடன் 533 செல்போன்களும் மீட்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று (டிச.18) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.18) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். அதன்படி ஊமச்சிகுளம் – காவல் ஆய்வாளர் கலையரசி, மேலூர் – காவல் சார்பு ஆய்வாளர் ஆனந்த ஜோதி, திருமங்கலம் – காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன், உசிலம்பட்டி – காவல் சார்பு ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் லஞ்ச புகாரில் குற்றம் சாட்டப்பட்ட, சரவணக்குமார், மதுரை ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று துணை ஆணையரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய நிதி அமைச்சகத்துக்கு உட்பட்ட ஜிஎஸ்டி துணை ஆணையரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
மதுரையில் பழைய பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் பயணத்தில் சிரமத்தையும் சந்தித்து வந்தனர் இதில் 100 பேருந்துகள் நீக்கம் செய்யப்பட்டு, 232 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 132 சாதாரண பேருந்துகளாகவும் மற்றவை தாழ்தளப் பேருந்துகளாகவும இயக்கப்படுகின்றன. இறுதியாக 15 பேருந்துகள் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டதாக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்தார்
மதுரையில் நாளை காலை 9 முதல்மாலை 5 மணி வரை பழங்காநத்தம், பெரியார்நகர், புதுக்குளம், பைகாரா, பசுமலை, விளாச்சேரி, திருநகர், நேதாஜிதெரு, பொன்மேனி, திருப்பாலை, ஊமச்சிகுளம், குலமங்கலம், கடச்சனேந்தல், ஆனையூர்,பனங்காடி,உசிலம்பட்டி,வலைபட்டி,சிந்துபட்டி, குளத்துப்பட்டி, செக்கானுாரணி, கொக்குளம், கீழவளவு, டி.கல்லுபட்டி,குளமங்கலம், சாத்தமங்கலம், சிவரகோட்டை,உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் மின்தடை
மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு: மாநகரில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் மாநகரில் உரிமை கோரப்படாத இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகனத்தை இழந்த பொதுமக்கள் இந்த அறிவிப்பை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.