India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பாக காவல் அலுவலர்களுக்கான குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2020 குறித்த திறன் வளர்ப்பு பயிற்சியை ஆட்சியர் சரயு நேற்று துவக்கி வைத்து உரையாற்றினார்.உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நாளை மாலை 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, நுகர்வோர்கள் உங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 29 புதிய மின் பஸ் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்காக மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் 17 பஸ்களும், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் 12 பஸ்களும் என மொத்தம் 29 மினி பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைப்பெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 1500 அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். போட்டிகளை கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் வெடிபொருள் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது தொடர்புடைய ஊராட்சி வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம், கட்டிட வரி ரசீது, வாடகை கட்டடமாக இருப்பின் நோட்டரி வழக்குரைஞர் கையொப்பத்துடன் கூடிய ஒப்பந்த பத்திரத்துடன் அக் 10ம் தேதிக்குள் டிஆர்ஓ அலுவலருக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.அனைத்து போட்டிகளும் நாக்கவுட் முறையில் நடந்து வந்த நிலையில் போச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்பி.சங்கு அரை இறுதி போட்டிகளை லீக் முறையில்தான் நடத்த வேண்டும் என மைதானத்தில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் குலுக்கல் மூலம் விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது
கிருஷ்ணகிரியில் குப்பம் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செப்15 திருடர்கள் புகுந்து கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.எனவே இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மைய மாவட்டம் வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் செம்பட்டி சிவா கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் 3 மாத காலம் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.(24.09.2024) இன்று முதல் மூன்று மாத காலம் கட்சி தோழர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் சு.ஜெகவீரபாண்டியன் என்பவரை பணியிடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் ஏ.கே.நாகராஜபூபதி என்பவரின் பணியிடத்தில் பணியமர்த்த செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் வே ராஜாராமன் ஆணை பிறப்பித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளருக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் எதிர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில், காவல்துறை சார்பில் முக்கிய குற்றவாளி ஆன சிவராமனுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடது என காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.