India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் SC/ST சமூகத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 (அ) டிகிரி முடித்த 18- 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவை தாட்கோ நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் ரூ.22,000 வரையும் திறமைக்கேற்ப ரூ.70,000 வரை ஊதியம் பெறலாம். இதற்கு www.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி ஊராட்சி, எஸ்.மோட்டூர் கிராமத்தில் தை பொங்கல் திருநாள் 2025 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கும் பொருட்டு, கரும்பு கொள்முதல் செய்யும் கரும்பு தோட்டத்தில் கரும்பின் தரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அனைத்து அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு 174 பேருக்கு வேட்டி – சேலை, இனிப்பு, காலண்டர் ஆகியவை வழங்கினார். மேலும், தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்கும் பொருட்டு தமிழக அரசின் சாதனைகள், தொலைநோக்குத் திட்டங்கள் பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என கூறினார்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த கெலமங்கலம் பகுதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டியை புதன்கிழமை இரவு அவரது சொந்த ஊரான கெலமங்கலத்தில் அழைத்து சென்று விடுவதாக கூறி அழைத்து சென்ற நபர், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் வைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய நிலையில் ஓசூர் மாநகர மகளிர் காவல் நிலைய போலீசார் ஏர்க்கல்நத்தம் கிராமத்தை சோ்ந்த லட்சுமணன்(35) என்பவரை நேற்று கைது செய்தனர்.
ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தவும், உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதற்கும் சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் இன்று (02.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜன 8ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள், தங்களது குறைகள், புகார்களை பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது எழுதி அனுப்பலாம். அதில் ஓய்வூதிய கணக்கு எண் உட்பட பிற விவரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும் என்று கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ சுமதி சிவன் 2024 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தட்டி தூக்கினார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 11021 மும்பை தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.7ஆம் தேதியன்று இரவு 21:30 மணிக்கு மும்பையில் புறப்பட்டு, SMVT பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும். ஓசூர் (ஜனவரி 8) மற்றும் தருமபுரி (ஜனவரி 9) நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஜன.5ஆம் தேதி நடைபெறுகிறது.17 வயது முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி.மீ. பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.3,000 உள்ளிட்ட 7 பேருக்கு ரூ.1000 வீதம் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.