India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் இதற்கு www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 20வரை விண்ணப்பிக்கலாம். இதில், ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாகவும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் பொருட்டு, நவம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊத்தங்கரை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட 8 வட்டங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பான பிரச்சனைகள், பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்தது. தீபாவளி பண்டிகை 31.10.2024 அன்று கொண்டாடப்பட்டதால், அரசு ஊழியர்கள் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அடுத்த மாயநாக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(48) – ரத்னம்மா(37) தம்பதி மற்றும் அவரின் மகன் நவீன்(10) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் தளி- கனகபுரா சாலை அடர்வனப்பகுதியான ஆன்னேமார்தொட்டி என்னும் வளைவு பகுதியில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து பாறையில் மீது விழுந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடும்பமே விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் திமுக சட்டப்பேரவை தொகுதி வாரியாக முகவர்கள், தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஓசூர் தொகுதி பார்வையாளர் வடிவேலு, முன்னாள் எம்எல்ஏ முருகன், மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மா. செயலாளர் பேசுகையில் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என கூறினார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கான ஓய்வூதிய குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை 8807380165 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 80க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஜவளகிரி தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த காட்டு யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அனைத்தையும் ஒன்றிணைத்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் வரும் 13.11.2024 அன்று பேச்சு போட்டி நடைபெற உள்ளது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை ஒட்டி இந்தப்போட்டி நடைபெற உள்ளது. ங்கேற்கும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியர் அவர்களின் கடிதத்துடன் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பரிசுகளாக ரூபாய் 5,000,3,000,2,000 மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், மகளிர் உண்மை தொகை, மின்னிணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 234 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சரயு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் கொடுக்குமாறு தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.