India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை- 6 என்ற முகவரிக்கு டிச 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கான 30 நாட்கள் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் வருகிற 21ஆம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் நகர கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தே.மதியழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முன்னெடுப்பாக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இடைநிலை பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வணிகவியல் பட்டம் பெற்று ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் உள்ளக தர மதிப்பீட்டு குழுவின் சார்பில் வினாத்தாள் தரம் மற்றும் மதிப்பீட்டு பணிகள் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. முதல்வர் முனைவர் சூ தனபால் தலைமை தாங்கி தன்னுடைய தலைமை உரையில் அனைத்து மாணவ மாணவர்களின் அறிவுத்திறன், சிந்திக்கும் திறன், ஆராய்ச்சி திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவைச் சோர்ந்தவர் நாகராஜ் (42). இவர், அதே பகுதியில் நடராஜ், கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து தேசிய ஊரக சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிந்து, போலி மருத்துவர் நாகராஜை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்கலாம், புதிய கற்காலத்திலிருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவற்றை அறியமுடிகின்றது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டி நவம்பர் 12, 13 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 17 மண்டலங்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் அதியமான் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளை செயலாளர் லாசியா தம்பிதுரை பாராட்டினார்.
மத்தூர் அருகே மாதம்பதி பகுதியை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (65). சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி வட்டாச்சியர் சத்தியா, சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் சின்னத்தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கங்காவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், வருகை பதிவேடு, பள்ளி சுகாதாரம், மாணவர்களின் கல்வித் தேர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த பள்ளியாக விளங்கி வருவதால் இப்பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோனா மேரியிடம் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கேடயத்தை வழங்கிப் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.