India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூரில் வரும் பிப்ரவரி 22 மற்றும் 23 தேதிகளில் தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. ரூபாய் 3000 மதிப்புள்ள பலதரப்பட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட இருக்கிறது. அனைவரும் மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் இன்று (பிப்.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் தனியாா் துறை முகாமில் இன்று காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன’. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் (பிப்.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் தனியாா் துறை முகாம் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன’ என்றார். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், தனி நூலகம், கணினி வழியாக கல்வி, ஸ்மார்ட் போர்ட், ஆடிட்டோரியம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் பசுமை பள்ளியாக திகழும் வகையில் செயல்படுவதை பி.எம்.கியூ.ஆர் நிறுவனம் நேரடியாகவும், இணைய வழியாகவும் 3கட்டங்களாக ஆய்வு செய்து ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கி உள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல் உள்ளிட்ட ப்குதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி மையத்தில் நாளை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343-291983 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட். கம்பெனியில் பணிபுரிய ஆண்கள், பெண்களுக்கான 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு நேர்முகத் தேர்வு நாளை பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 22 வரை காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் கம்பெனியில் நடைபெற உள்ளது. 10,+2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் தக்க கல்வி சான்றுகளுடன் நேரில் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
பணிகள் காரணமாக இன்று (19-02-2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள சிங்காரப்பேட்டை, மாட்ராபள்ளி, எழூர் சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், மாதரப்பள்ளி மாதப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம் எழூர் எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
வேப்பனப்பள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்(38). இவரது 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்தார். நில அளவையர் ஜெயகாந்த் (29), சுரேஷிடம் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சுரேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின் படி பணத்தை ஜெயகாந்தனிடம் கொடுத்த போது போலீசார் அவரையும் திலீப்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் இன்று 18.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் இடுபடுகின்றனர். இதில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா ரவிதங்கம் தலைமையில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.