India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கிருஷ்ணகிரியில் மட்டும் 84 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
மின் பராமரிப்பு காரணமாக இன்று (பிப்.25) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானபுரம், பேரிகை, பேரிகை சிகானப்பள்ளி, நெரிகம், எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூரைச் சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயதுடைய பெண்ணும் 19ஆம் தேதி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மலைக்கு சென்றனர். அப்போது, மலை உச்சியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி நகை,பணத்தை வழிப்பறி செய்து, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த <
வேலம்பட்டி பகுதியிலிருந்து காவேரிபட்டிணம் நோக்கி நேற்று பிப்ரவரி 22ஆம் தேதி காலை இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற குட்டூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அதிக வேகமாக சென்றதில் தளிப்பட்டி மேம்பாலம் பகுதியில் எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (பிப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. இதில் கிருஷ்ணகிரி காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (பிப் 22) மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் அவர்கள் தலைமையில் ஒசூர் – தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மார்ச் – 1 முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இன்று (பிப் 22) குருபரப்பள்ளி, டெல்டா நிறுவன கூட்டரங்கில், டெல்டா நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை செயலாளர் திரு.அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரூ செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று (பிப் 22) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் (2ஆம் கட்டம்), ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிதியுதவி அளிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் திரு.எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் திரு.கே.சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
Sorry, no posts matched your criteria.