India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே..,NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <

கொட்டாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). கடந்த 25ம் தேதி மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் இருவரும் வேலுமணியிடம் கொடுத்த ரூ.50 ஆயிரம் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் வேலுமணியை தடியால் தாக்கி கழுத்தில் துண்டை போட்டு தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால் மனவேதனையடைந்து விஷம் குடித்த வேலுமணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.