India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் கலெக்டராக இருந்த பிரெட், தன் மனைவிக்காக 1864ல் ஓசூரில் கோட்டை ஒன்றை கட்டினார். இந்த கோட்டையை கட்ட அரசு பணத்தை எடுத்ததற்காக பிரட் பதவி பறிக்கப்பட்டது. 1871ல் பிரட், மாளிகையை சென்னை மாகாண அரசுக்கு விற்று, லண்டனுக்கு திரும்பினார். 1937-ல் ஏலம் விடப்பட்ட இந்த கோட்டை சூறையாடப்பட்டு, தற்போது அகழி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால், கடைசி வரை பிரட்டின் மனைவி இந்த கோட்டைக்கு வரவில்லை என்பது சோகமான ஒன்று.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவுபெற்ற மனநல மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்கள் குறித்த கண்காணிப்பு கூட்டம் நேற்று (ஜன.2) மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நேற்று(ஜன.2) நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், உள் நோயாளிகள் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை ஜனவரி 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நேரடி விநியோகம் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக அமையும். ஷேர் பண்ணுங்க

Sorry, no posts matched your criteria.