Krishnagiri

News March 28, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக சூறாவளி வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் நேற்று (மார்ச் 27) மாலை ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட உப்பாரப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக  தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

News March 27, 2024

கிருஷ்ணகிரியில் தேர்தல் புறக்கணிப்பு

image

கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த கம்மம் பள்ளி ஊராட்சி, பழையஊர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் பழைய ஊர் கிராம வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும்  ஊரில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

News March 27, 2024

கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

image

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

தேர்தல் பொது பார்வையாளருடன் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் குமாரி பாசி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

News March 26, 2024

கிருஷ்ணகிரி; பெண்ணிடம் மோசடி

image

கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி அருகே வெங்கடேஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பாள்(31), தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ்அப் செயலிக்கு மர்ம நபர், குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, சுந்தரம்பாள் பல தவணைகளாக ₹6.57 லட்சம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 26, 2024

கிருஷ்ணகிரியில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுத வந்தனர். கிருஷ்ணகிரி தூய பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வு எழுதுவதற்கு முன்பாக கூட்டு பிரார்த்தனையில் மாணவிகள் ஈடுபட்டனர். இதில் பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

News March 25, 2024

கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜே பி பிரகாஷ் இன்று (மார்ச்.25) அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

கிருஷ்ணகிரி: கர்நாடகத்தினர் ஆர்ப்பாட்டம்

image

தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்போம் என தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டித்து, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஒசுர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தீவிரமடைந்தால், கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்கள் திரையிட விடமாட்டோம், எல்லைப்பகுதிகளை அடைப்போம் என எச்சரித்தனர்

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபிநாத் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

error: Content is protected !!