India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <

தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய (ஜன.8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.35, உருளை: ரூ.30, வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.50, கத்திரி: ரூ.25, வெண்டைக்காய்: ரூ.60, முருங்கை: ரூ.280, பீர்க்கங்காய்: ரூ.40, சுரைக்காய்: ரூ.20, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.50, தேங்காய்: ரூ.50, பீன்ஸ்: ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.8) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24-28, உருளை: ரூ.28, பெரிய வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.40, கத்திரி: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.40, பீர்க்கங்காய்: ரூ.26, சுரைக்காய்: ரூ.14, புடலங்காய்: ரூ.26, பாகற்காய்: ரூ.28, அவரை: ரூ.24, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த தமிழக விவசாயிகள் கறி கோழி வளர்ப்பு, பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்கள் அருண் மற்றும் அஸ்வத்நாராயணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் பெரியணண், பிரகாஷ், பொருளாளர்கள் தங்கவேலு, ஞானசேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் கோழி பண்ணையாளர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,217 குடும்ப அட்டைதாரார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,058 நியாயவிலைக் கடைகளில் இன்று (ஜன.8) முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஜாகீர் மோட்டூரை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (46) மற்றும் கனகராஜ் (19). நேற்று (ஜன.7) அப்பகுதியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை பேச்சுவார்த்தையில் கனகராஜ் மற்றும் லட்சுமணன் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை அலுவலர்கள் தேன்கனிக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொங்குசெட்டுப்பள்ளி, நர்சரி பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுவனை மீட்டனர். பின்னர் சிறுவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டான். இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் சூர்யராஜ் (28). புத்தாண்டன்று அப்குதியை சேர்ந்த மனோஜ் (28), சபரி (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவே நிறுத்தி இருந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனோஜ் தரப்பினர் சூர்யராஜை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.07) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன -08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.