India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் சதீஷ்(30) கடந்த மாதம் 24ஆம் தேதி போக்சோ வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தார். இந்நிலையில், மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் பின்புரம் உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஜன.1ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அருகே உள்ள கூர்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி மண்ணம்மாள்(70). இவர், கூர்சம்பட்டியில் இருந்து பெருமாள்(55) என்பவரின் மொபட்டில் மத்தூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க சென்றார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய போது, மொபட்டில் இருந்து தவறி விழுந்த மண்ணம்மாள் படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” திட்டத்தின் கீழ், மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓசூர் வட்டம் குமுதேபள்ளி மித்திராலயா பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண், பல், சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” திட்டத்தின் கீழ், மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓசூர் வட்டம் குமுதேபள்ளி மித்திராலயா பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண், பல், சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (ஜன.09) ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ. 4.5 கோடி மோசடி செய்த புகாரில், ஓசூரில் பதுங்கி இருந்த பாஜகவின் மாநில மகளிரணி துணைத் தலைவி மதிவதனகிரி கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஓசூர் பதுங்கி இருந்த அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் <

கிருஷ்ணகிரி மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். ஆகஸ்ட் <
Sorry, no posts matched your criteria.