Krishnagiri

News September 25, 2024

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைப்பெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 1500 அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். போட்டிகளை கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News September 25, 2024

பட்டாசு கடை வைப்போர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் வெடிபொருள் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது தொடர்புடைய ஊராட்சி வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம், கட்டிட வரி ரசீது, வாடகை கட்டடமாக இருப்பின் நோட்டரி வழக்குரைஞர் கையொப்பத்துடன் கூடிய ஒப்பந்த பத்திரத்துடன் அக் 10ம் தேதிக்குள் டிஆர்ஓ அலுவலருக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் விதிமுறைகள் மாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.அனைத்து போட்டிகளும் நாக்கவுட் முறையில் நடந்து வந்த நிலையில் போச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்பி.சங்கு அரை இறுதி போட்டிகளை லீக் முறையில்தான் நடத்த வேண்டும் என மைதானத்தில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் குலுக்கல் மூலம் விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது

News September 25, 2024

ஏ.டி.எம் மையங்களுக்கு கூடுதல் கட்டுபாடுகள்

image

கிருஷ்ணகிரியில் குப்பம் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செப்15 திருடர்கள் புகுந்து கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.எனவே இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 25, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து இடை நீக்கம்

image

கிருஷ்ணகிரி மைய மாவட்டம் வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் செம்பட்டி சிவா கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் 3 மாத காலம் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.(24.09.2024) இன்று முதல் மூன்று மாத காலம் கட்சி தோழர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது.

News September 25, 2024

கிருஷ்ணகிரி:மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட மாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் சு.ஜெகவீரபாண்டியன் என்பவரை பணியிடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் ஏ.கே.நாகராஜபூபதி என்பவரின் பணியிடத்தில் பணியமர்த்த செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் வே ராஜாராமன் ஆணை பிறப்பித்துள்ளார்.

News September 24, 2024

கிருஷ்ணகிரி போலி என்சிசி விவகாரம்; ஜாமீனுக்கு எதிர்ப்பு

image

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளருக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் எதிர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில், காவல்துறை சார்பில் முக்கிய குற்றவாளி ஆன சிவராமனுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடது என காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

News September 24, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட புத்தக ஆர்வலர்கள் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூலகத்தில் உள்ள நூல்கள் எண்ணிக்கை, மற்றும் அரிய வகை நூல்கள் இருப்பின் அதன் விவரத்தினை 07.10.2024 க்குள் கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகம், தொலைபேசி எண்:04343-263643 தொடர்பு கொள்ளலாம்

News September 24, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக சென்று வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 24, 2024

மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

image

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்வார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சில்பா பிரபாகர் சதீஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.